ஓம் நமோ

நாராயணாயா

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்

திருக்கோயிலின் வரலாறு

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்,ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஷட்கோணபுரி (ஆறுகோணங்கள், அருந்தமிழ்குன்றம்) என்னும் அரக்கோணம் நகரின் மையப்பகுதியில் முதன்மையான திருக்கோயிலாக அமைந்துள்ளது.

இவ்வாலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது.இந்த ஆலயம், 45க்கும் மேற்பட்ட கருங்கல் தூண்களால் ஆன மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும், ஸ்ரீவைகானச பகவத் சாஸ்திர முறையின்படி, நித்ய ஆராதனைகளாக நடைபெற்று வருகின்றன.

0 +
ஆண்டுகள் பழமையான ஸ்தலம்

ஹரே கிருஷ்ணா

ஹரே ராமா

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

பூஜை தொடர்பான சந்தேகங்களுக்கு

விவரங்களை நிரப்பவும்

நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

திருக்கோவில் அமைப்பு

ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியர்களுடன் எழுந்தருளியுள்ளார்

ஸ்ரீதேவி ஸ்ரீபூமாதேவி ஆதிகேசவப்பெருமாள்

ஸ்ரீ அமிர்தவல்லி

ஸ்ரீவைகாநஸம் பகவத்தசாஸ்த்திரம்

நடை திறக்கும் நேரம்

ஞாயிறு

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

திங்கள்

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

செவ்வாய்

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

புதன்

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

வியாழன்

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

வெள்ளி

6:30 am - 11:00 am

6:00 pm - 8:00 pm

சனி

6:00 am - 12:30 am

6:00 pm - 9:00 pm

தன்னார்வலர்கள் தொண்டுகள்

தன்னார்வலர்கள் தொண்டு பணிகள்

சிறப்பு பூஜைகள்

ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார் சன்னதி

இந்த திருக்கோயிலில் உள்ள விநாயகர்,கிழக்கு திசை நோக்கியவாறு பச்சைக்கல் வலம்புரியுடன்,திருநாமம் சாத்திக்கொண்டு தும்பிக்கை ஆழ்வார் சொரூபமாய் எழுந்தருளிவுள்ளார். இவ்விநாயகர், அரசமரம் மற்றும நாககற்கள் சேர்ந்து அமைந்துள்ளதால் இவை மூன்றையும் சேர்த்து வலம்வருவதால் அனைத்து காரியங்களுக்கும் வெற்றி நிச்சயமாக கிட்டும் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷமான உண்மை.

குழந்தை பாக்கியம் பெறவேண்டும் என்பவர்கள் இந்த மூன்று தெய்வங்களையும் காலை (5.30-6.30AM) மணிக்குள் ஒரு மண்டலத்திற்கு(48 நாள்) கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து வலம்வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் பெறலாம்.

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சன்னதி

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சன்னதி,கிழக்கு திசை நோக்கியவாறு வடக்கு முகமாக மிகவும் பழமைவாய்ந்த மற்றும் முதன்மையான தெய்வமாக அமைந்துள்ளார். இவர் மிகவும் சக்திவாய்ந்த அரூபமாய் அருள்பாலிக்கிறார்

அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு மட்டைத்தேங்காய் முடித்துவைத்து ஒரு மண்டலம் (48 நாள்)கோயிலை வலம் வந்தால் நினைத்தகாரியங்கள் (குழந்தைபாக்கியம், திருமணம், கல்வி, தொழில், கடன் பிரச்சனை, உடல் ஆரோக்கியம், வியாபாரம்) விரைவில் கைகூடும்.

சிறப்பு வழிப்பாடு

1.நவகிரக தோஷங்கள் நீங்க, 108 வடை மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் தோஷங்கள் தீரும்.

2.அனைத்து சுபகாரியங்கள் சித்தியடைய, 108 வெற்றிலைமாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

3.உடல் ஆரோக்கியம் மேம்பட, வெண்ணை சாற்றி வழிபடலாம்.

4.துஷ்ட சக்திகள் நீங்க, எலுமிச்சைப்பழம் வைத்து அல்லது செந்தூரம் சாற்றி வழிபட்டால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி

பெருமாளுக்கு நேர் ஏதிராக சன்னதி கொண்ட பெரியதிருவடி என்னும் ஸ்ரீகருட பகவான் கைகூப்பிக்கொண்டு பக்த அரூபமாய் எழுந்தருளி உள்ளார்.

ஸ்ரீ கருடாழ்வாருக்கு பஞ்சமி அல்லது ஸ்வாதி திருநட்சத்திர நாளில்  திருமஞ்சனம் ,திருக்கனமுது (பால் பாயசம்)செய்து  சமர்ப்பித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் நாகதோஷம், சர்ப்பதோஷம் மற்றும் கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் சன்னதி

ஸ்ரீ அம்ருதவல்லி தாயார், தெற்கு திசை நோக்கியவாறு தனி சன்னதியாக,பத்மாசனத்தில் அமர்ந்தகோலத்தில் எழுத்தருளிவுள்ளார். திருக்கடிகை க்ஷேத்ரம் என்னும் சோளிங்கரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்ருதவல்லி தாயாரை மலையேறி சேவிக்கமுடியாத பக்தர்களுக்காக,இந்த ஆலயத்தில் அதே தாயாரை நம் பெரியோர்கள் எளிதில் சேவிக்கும்படியாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

  1. திருமணத் தடை நீங்க, ஸ்ரீ அம்ருதவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து 21 நாள்கள் மஞ்சள் அர்ச்சனை செய்ய வேண்டும். 21வது நாள் தாயாருக்கு திருமாங்கல்யம், பட்டுவஸ்திரம், தாம்பூலம் முதலியவற்றை சமர்ப்பித்து வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நிறைவேறும்.
  2. கடன் பிரச்சினை நீங்க, பில்வபத்திரத்தால் தாயாரை அர்ச்சனை செய்தால், கடன் பிரச்சினைகள் நீங்கி ஐஸ்வரியம் பெருகும்.

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதி

ஸ்ரீதேவி பூதேவியருடன்,ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தெற்கு திசை நோக்கியவாறு திருநின்ற கோலத்தில் சங்கு,சக்ர,கதா அபய அஸ்தத்துடன் அச்சாவதார ரூபமாய் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.பக்தர்கள் வேண்டும் வரத்தை அள்ளித்தரும் வரதனாய் அமைந்துள்ளார்.

க்ஷேத்திரங்களில் பெருமாளானவர் பெரும்பாலான இடங்களில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். சில க்ஷேத்திரங்களில் வடக்கு திசை நோக்கி இருப்பது சிறப்பாகும். அறிதிலும் அறிதான சில க்ஷேத்திரங்களில் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பது விசேஷம். அவ்வகையில் நமது க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பது மிகுந்த சிறப்பாகும்.

கோவில் இருப்பிடத்தை அடைவது எப்படி

சாலை

அரக்கோணம் மார்க்கெட்டை அடுத்த பழைய பஜார் தெருவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மார்க்கெட்டில் இருந்து 5நிமிடம் நடை தொலைவில் அமைந்துள்ளது.​

 

பேருந்து

அரக்கோணம் நகரப்பேருந்து நிலையத்திலிருந்து கனகம்மா சத்திரம் செல்லும் பேருந்தில் செல்லலாம்.

இரயில்

சென்னை அரக்கோணம் மார்கத்தில் செல்லும் தொடர்வண்டியில் அரக்கோணம் இரயில் நிலையத்தை அடையாளம். அங்கிருந்து 1கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஆலயத்திற்கு ஆட்டோ வசதி உண்டு

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்

ஓம் நாராயணாய வித்மஹே | வாசுதேவாய தீமஹி | தந்நோ விஷ்ணுஃ ப்ரசோதயாத் ||

நாராயணனை நாங்கள் அறிவோமாக; வாசுதேவனை தியானிப்போமாக; அந்த விஷ்ணு எங்களை வழிநடத்துவாராக.